சென்னை ரயிலில் பேய்! நடந்தது என்ன? - புது பேய் கதைகள்

சென்னை ரயிலில் பேய்! நடந்தது என்ன?  - புது பேய் கதைகள்
புது பேய் கதைகள்


சென்னை ரயிலில் பேய்! நடந்தது என்ன?  - புது பேய் கதைகள்


நம் உலகம் தோன்றி இன்று முதல் நாம் தேடிக்கொண்டிருக்கும் மர்மங்களில் ஒன்று பேய். அகோர மரணம் அடைந்தவர்களின் ஆத்மா, ஏலியன்களின் வேலை, சூனியம், எல்லா மனிதர்களையும் போல பூமியில் தோன்றி மனிதர்களின் கண்களுக்கு தெரியாமல் இருக்கும் அமானுஷ என்ற பலவிதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆனால் நிறைவேறாத ஆசைகளுடன் அகோர மரணமடைந்தவர்களின் ஆத்மா தான் பேயாக வருகிறது என்று சிலர் நம்புகின்றனர். பேயை நான் பார்த்தேன் அது நான் தனியாக இருக்கும்போது எனக்குப் பழக்கப்பட்ட குரலில் கூப்பிடுவது போலவும் இரவு நேரங்களில் என் வீட்டின் கதவை தட்டியது போலவும் இருக்கின்றது என்று பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் இரவு நேரத்தில் ஓடும் ரயிலில் பேய் பார்த்த அனுபவத்தை ஒருவர் கூறியுள்ளார். அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அனுப்பிரியா வயது இருபத்தி நாலு அவர் ஹைதராபாத்தில் மின்பொருள் ஆய்வாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு நாள் சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயில் செல்லும் போது ஏற்பட்ட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் மற்றும் அவரது தாயார் ஜெயா ரயிலில் அமானுஷ்யம் நிகழ்ந்ததாக கூறியுள்ளனர். சென்னையில் உள்ள எக்மோர் ரயில் நிலையத்தில் ராக்போர்ட் ரயில் இரவு 8 மணிக்குப் புறப்பட தயாராக இருந்தது. இவர்களோடு ஒரு சிலர் மட்டும் அந்த ஏசி கம்பார்ட்மெண்ட்ல இருந்திருக்காங்க. அப்போது அனுப்பிரியாவின் தாயார் ஜெயா அங்கு இருந்த ஒரு வட இந்தியரிடம் இந்த கம்பார்ட்மெண்ட் முழுவதும் காலியாக இருக்கு. ஆனா டிக்கெட் மட்டும் ஏன் இவ்வளவு கடினமாய் இருக்கு என கேட்டாங்க. அதற்கு அவர் இந்த ரயில் போகும் பாதை அமானுஷ்யம் மிகுந்தது அதனால் இரவு நேரங்களில் அதிக மக்கள் வரமாட்டார்கள் என்று கூறினார். அதைக் கேட்ட அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டு உறங்கச் சென்று விட்டனர். இரவு 12 மணி இருக்கும் அவர்கள் இருந்த அறையின் கண்ணாடியை யாரோ கீறுவது போல இருந்ததும் ஜெயா விழித்துக்கொண்டு அந்த கண்ணாடியை பார்த்தார். அதில் எந்த கீறலும் இல்லை உடனே அவர் கண்களை இருக்க மூடிக்கொண்டாள். அடுத்த 15 நிமிடத்தில் ரயிலின் ஊழியர் ஒருவர் அவரது கம்பார்ட்மென்ட் நீக்கி ஓடுவதை கண்டார். அவர் படுக்கையை விட்டு அங்கு சென்று பார்த்தபோது அவரது கம்பார்ட்மெண்ட் கதவை சாத்தி விட்டு அடுத்த கம்பார்ட்மெண்டிற்கு சென்று விட்டார். அடுத்த 15 நிமிடத்தில் அனுவிற்கும் அவரது தாயார் ஜெயா விற்கும் ஒரு பெண்ணின் பலத்தை அழுகின்ற குரல் கேட்டது. அந்த கதறிய அழுகுரலைக் கேட்ட வட இந்தியர் அவர்களிடம் வந்து இந்த குரலை கேட்டீர்களா என்று கேட்டார். இவர்களும் ஆமாம் என்று கூற அவர்கள் மூவரும் கழிவறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு எதுவும் இல்லை. திடீர் என்று கம்பர்ட்மெண்ட் கதவை யாரோ தட்டுவது போலவும் மீண்டும் அதே குரல் நான் இங்கு செத்து கொண்டிருக்கிறேன் என்னை காப்பாற்றுங்கள் என்று கேட்டது. சில நிமிடங்கள் கழித்து அந்த சத்தம் நின்றுவிட்டது. ரயில் காலையில் திருச்சியை அடைந்ததும் அவர்கள் மூவரும் பாதுகாவலரிடம் சென்று அதைப் பற்றி கூறினார். அவர் நீங்கள் போன ரயில் பாதை அமானுஷ்யம் மிகுந்தது. சில வருடங்களுக்கு முன் ஒரு பெண் அதே கம்பார்ட்மெண்டில் சில மர்ம ஆசாமிகளால் வெளியே தூக்கி எறியப்பட்டார் அப்போதிலிருந்தே இந்த கம்பார்ட்மெண்டில் பயணம் செய்யும் சிலருக்கு இந்த அமானுஷ்யம் நடக்கும் என்று கூறியுள்ளார்.



நன்றி


No comments:

Post a Comment