கழுதையும் குதிரையும் - Tamil Stories For Kids

கழுதையும் குதிரையும் - Tamil Stories For Kids

கழுதையும் குதிரையும் - Tamil Stories For Kids

முன்பு ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையின் சொந்தக்காரரிடம் ஒரு கழுதையும் ஒரு குதிரையும் இருந்தன. அந்த குதிரைக்கு எப்போதும் நல்ல உணவும் நல்ல கவனிப்பும் கிடைத்தது. ஆனால் கழுதைக்கு அதுபோல உணவோ கவனிப்போ கிடைக்கவில்லை. இதனால் கழுதைக்கு எப்போதும் மன வருத்தம் இருந்தது. நான் நன்கு வேலை செய்தும் என்னை சரியாக கவனிப்பதில்லை. ஆனால் வேலை செய்யாத குதிரையை மிகவும் சிரத்தையுடன் கவனிக்கின்றனர் என்று நினைத்தது. பல மாதங்கள் சென்றன நாட்டில் யுத்தம் வந்தது உடனே அந்த பண்ணை காரர் குதிரையில் ஏறி யுத்தம் செய்ய சென்றார். பல நாட்களுக்குப் பின் குதிரையும் எஜமானும் பண்ணைக்கு திரும்பினர். குதிரைக்கு பலமான காயம் பட்டிருந்தது. காயத்தினால் உடல் புண்ணாகி இருந்த குதிரையைப் பார்க்க கழுதைக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதுவரை குதிரைகள் கிடைத்த உபசரிப்பு களைப் பற்றி தப்பாக நினைத்துக் கொண்டிருந்தது புரிந்தது. கழுதை உடனே குதிரையிடம் சென்று நண்பா என்னை மன்னித்துவிடு இதுநாள்வரை உனக்கு கிடைத்த கவனிப்பை பார்த்து நான் மிகவும் பொறாமை பட்டேன் இப்போதுதான் உண்மை காரணம் புரிந்தது. என்னை மன்னித்து விடு என்றது. அன்று முதல் கழுதை குதிரை இடம் மிகவும் நட்புடன் பழகியது. அதனால் கழுதை மிகவும் சந்தோஷத்துடன் இருந்தது. அதுமட்டுமின்றி இதனை நன்கு கவனிப்பது இல்லை என்று கவலைப்படவும் இல்லை. நமக்கு கிடைப்பதில் திருப்தி அடைய வேண்டும்.


முடிந்தவரை பகிரவும்


நன்றி

No comments:

Post a Comment