நரியும் நாரையும் - Tamil stories for kids

நரியும் நாரையும் - Tamil stories for kids

Tamil stories for kids

Tamil stories for kids

முன்னொரு ஒரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு குள்ளநரி வசித்து வந்தது. அது எப்போதும் மற்ற மிருகங்களைக் கேலி செய்து ஆனந்தம் அடைந்தது. ஒரு நாள் ஒரு அழகிய நாரை அந்தக் காட்டிற்கு வந்தது. வந்த சில நாட்களிலேயே நாரை காட்டிலுள்ள எல்லாரிடமும் மிக நட்பாக பழகியது. இதைக் கேள்விப்பட்ட நரிக்கு நாரை இடம் பொறாமை தோன்றியது. நாரைக்கு எதிராக ஒரு சதித் திட்டம் போட்டது. அடுத்த நாள் நாரை தனியாக இருக்கும்போது நரி மெதுவாக அவனிடம் சென்று மிக மரியாதையுடன் நண்பா நீ இந்த காட்டிற்கு வந்ததை கேள்விப்பட்டேன் நாளை மதிய உணவிற்கு என் வீட்டிற்கு உன்னை மகிழ்ச்சியுடன் அழைக்கிறேன் என்று சொன்னது. நரிகள் அழைப்பைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த நாரை நரியின் வீட்டிற்கு போக அது சம்மதித்தது. அடுத்த நாள் நாரை நரியின் வீட்டிற்கு சென்றது. அவர்கள் உணவுக்காக உட்கார்ந்ததும் நரி நாரைக்கு ருசியான பாயசத்தை பரிமாறியது. நாரைக்கு வாயில் நீர் ஊறியது ஆனால் தட்டையான கிண்ணத்தில் ஊற்றின பாயசத்தை அதன் நீளமான அழகினால் ருசி பார்க்க முடியவில்லை. தீய குணமுடைய நரி நரையைப் பார்த்து கேலியாக சிரித்து கொண்டு பாயசம் முழுவதையும் குடித்தது. கோபமடைந்த நாரை அந்த நரிக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தது. நாரையும் மிகப் பணிவுடன் நரியை தன் வீட்டிற்கு அழைத்தது. அடுத்த நாள் சாப்பிட உட்கார்ந்ததும் புத்திசாலியான நாரை நரிக்கு உள்ள உணவை ஒரு உயரமான பாத்திரத்தில் கொடுத்தது. நான் சந்தோஷமாக தன் உணவை சாப்பிட்டது. ஆனால் நரிக்கு பாத்திரத்தில் தலை நுழையவில்லை. நரி பசியுடன் உட்கார்ந்து நாரை ருசியுடன் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் நரிக்கு தான் மற்றவர்களை ஏமாற்றி மட்டம் தட்டும் அதே அனுபவம் தனக்கும் கிடைத்தது என்று புரிந்தது. அந்த சம்பவத்திற்குப் பின் நரி எல்லாரிடமும் மரியாதையுடன் பழகியது. நாம் கொடுப்பது தான் நமக்கும் கிடைக்கும்.


முடிந்தவரை பகிரவும்


நன்றி

No comments:

Post a Comment