காகமும் அன்னப்பறவையும் - Tamil Stories For Kids
|
Tamil Stories For Kids
|
ஒரு குளத்தின் அருகே ஒரு காகம் வசித்து வந்தது அதற்கு பக்கத்திலுள்ள ஒரு மரத்தைப் ஒரு அன்னப்பறவையும் வசித்து வந்தது. அந்த அன்னப் பறவை மணிக்கணக்காக அந்தக் அழகிய குளத்தில் தான் நீந்திக் கொண்டிருக்கும் காகத்திற்கு எப்போதுமே தன் நிறத்தை நினைத்து வருத்தமாக இருந்தது. அன்னப்பறவையின் அழகை பார்க்கும் போது அவனுக்கு பொறாமையாக இருந்தது. ஒரு நாள் அன்னப்பறவையின் அழகை நினைத்து வியந்து கொண்டிருக்கும் எனக்கும் இதுபோல் அழகு வேண்டும் என்று ஆசைப் பட்டது. இந்த அன்னப் பறவைக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகும் வெள்ளை நிறமும் உள்ளது என்று காகம் அதிசயபட்டது. ஒருவேளை அப்பறவை எப்போதும் தண்ணீருக்குள்ளேயே இருப்ப தாலும் பலமுறை குளிப்பதாலும் வெள்ளையாக இருக்கின்றதோ என்று நினைத்தது. காகமும் இனி எத்தனை முறை முடியுமோ அதனை முறை குளிப்பது என்று தீர்மானித்து. அப்படி செய்தால் தானும் அழகாக வெள்ளையாக மாறலாம் என்று நம்பியது. அந்த நம்பிக்கையின் அழகன் ஆக மாறும் என்னும் பயிற்சிகளை காகம் துவங்கியது. காகத்திற்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ள அன்னப்பறவையும் மற்ற பறவைகளும் ஆவலுடன் காத்திருந்தன.
பலமுறை குளித்த பின்னரும் காகத்தின் தோற்றத்தில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இருந்தும் காகம் தன் முயற்சியை கைவிட தயாராக இல்லை. ஒரு நாளில் காகம் பலமுறை குளித்தது. கடைசியில் ஒரு நாள் காகம் காய்ச்சலில் விழுந்தது. அதிலிருந்து நலம் பெற்று வர மிகவும் கஷ்டப்பட்டது. அப்போதுதான் அந்த காகத்திற்கு தவறு புரிந்தது. பலன் கிடைக்காது இந்த முயற்சியை நிறுத்த வேண்டும். நான் எப்படி இருக்கின்றேன் அப்படி இருக்க பழகி சந்தோஷப்பட வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டது. மனதில் அப்படி ஒரு மாற்றம் வந்தபின் அந்தக் காகம் எப்போதும் சந்தோஷம் உள்ள ஒரு பறவையாக மாறியது. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பதில் சந்தோசப்பட வேண்டும்.
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.