திமிரோடு நில் Motivational Story in Tamil

 திமிரோடு நில் Motivational Story in Tamil

Motivational Story in Tamil
Motivational Story in Tamil

மழைக்காலத்தில் கார் மேகங்கள் ஒன்று சேர்ந்து சூரியனை மறைக்கலாம். அதன் ஒளியை தடுக்கலாம் பிரகாசத்தை மழுங்கடிக்கலாம் ஆனால் அது நிரந்தரமானது அல்ல. சில நாட்களிலேயே கார் மேகங்கள் கலைந்து போகும் சூரியன் மீண்டும் தனது ஒளிக்கற்றைகளை இவ்வுல கெங்கும் பரப்பும். என்றும் கருமேகங்கள் சூரியனின் மகத்துவத்தை குறைத்துவிட முடியாது. அதன் பிரகாசத்தை அழித்துவிட முடியாது. நண்பா உன் வாழ்வில் சில மனிதர்களின் கார்மேகம் போல தோன்றுவார்கள். அவர்கள் உன் பிரகாசத்தை மறைப்பார்கள் உன் சக்திகளை மழுங்கடிப்பார்கள். அவ்வாறான மனிதர்களை நீ எதிர்கொண்டால் உன்னால் முடிந்தவரை அவர்களிடம் இருந்து அவர்களது ஆலோசனைகளில் இருந்து விலகியே இரு. இங்கு சில மனிதர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு அடுத்து அவரது வாழ்வில் என்ன நடக்கின்றது என்ற தேடுதல் மட்டுமே இருக்கும். நீ என் காரியத்தை செய்தாலும் அவர்கள் அதில் குறை காண்பார்கள். உன்னை விமர்சிப்பார்கள் இதை இன்னும் சிறப்பாகச் செய்யலாம் என கருத்து கூறுவார்கள். நீ தவறு இழைத்து விட்டதாக சுட்டிக்காட்டுவார்கள். அவ்வாறான மனிதர்களது மனமெங்கும் பொறாமையும் வஞ்சகமும் நிறைந்திருக்கும். ஒருவன் தன் வாழ்வில் முன்னேறுவது அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களைத் தாண்டி நீ வளர்வதே அவர்களால் சகித்துக்கொள்ள முடியாது. தன்னால் முடியாததை நீ செய்து விட்டாய் ஏ என்ற வயிற்றிலேயே அவர்களுள் காரியங்களில் மூக்கை நுழைக்கிறார்கள். அதை விமர்சிக்கிறார்கள் நிச்சயம் அவர்களும் உன்னுடைய சக்திகள் அனைத்தையும் உறிஞ்சி கொள்ளும் ஒட்டுண்ணிகள் ஆவார்கள். அவ்வாறான மனிதர்களை இனி எதிர்கொள்ள நேரிட்டால் அவர்களையும் அவர்கள் கூறும் கருத்துக்களையும் உனது தலைக்குள் அணுவளவும் ஏற்றி கொள்ளாதே. உன்னால் முடியாது என அவர்கள் கூறியதை நீ முடித்துக் காட்டு. அவர்கள் மென்மேலும் வயிறு எரியும் படியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டு. நண்பா நீ வானையே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சூரியனை போன்றவன். சில நேரங்களில் இன்று உன்னை கார் மேகங்கள் சூழ்ந்து இருக்கலாம். அவை உனது உண்மையான சக்தியை இவ்வுலகுக்கு மறைத்திருக்கலாம். அதனால் உன்னை சுற்றி உள்ளவர்கள் உன்னை ஒரு பலவீனமானவனாக எண்ணியிருக்கலாம். திறமையற்றவர்கள் எண்ணியிருக்கலாம். ஆளுமை அற்றவனாக எண்ணியிருக்கலாம். ஆனால் நீ யார் என்பதையே மறந்து விடாதே. உனது திறமைகளை நீயே மட்டமாக எண்ணிவிடாதே உன்னால் முடியாது என்பதை நீயே நம்பி விடாதே. ஏனெனில் உன்னை பற்றி அடுத்தவன் என்ன எண்ணுகின்றான் என்பது உன் வாழ்வில் தாக்கத்தையும் செலுத்தாது. ஆனால் உன்னைப் பற்றிய உனது எண்ணம் நிச்சயம் உன் வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவிற்கு சக்திவாய்ந்தது. நண்பா இங்கு அடுத்தவனை திருப்திப்படுத்துவதற்காக நீ பிறக்க வில்லை. யாரிடமும் நற்பெயர் வாங்குவது உன் வேலை அல்ல. இங்கு உனக்கானது ஒரு வாழ்க்கை உள்ளது வாழ்க்கையை மேம்படுத்த நீயே உழைக்க வேண்டும் போராட வேண்டும். இன்று உன்னிடம் கருத்து கூறிக்கொண்டு உன்னை விமர்சிப்பவர்கள் எவருமே அதில் உனக்கு உதவப்போவதில்லை. அதை மனதில் வைத்துக்கொண்டு உன் காரியங்களை ஆற்று. என்றும் கார்மேகங்கள் மறைப்பதால் சூரியன் அழிந்து விடுவது இல்லை. மேகங்கள் விலகும் போது அது தன் பலத்தை உலகுக்கு காட்டும் தான் யார் என்பதை காட்டும் அதுவரை அது பொறுமையோடு காத்திருக்கும்.

Mi Smart Band 4 0.94-inch AMOLED Color Display, 20 Days Battery Life, Unlimited Watch Faces, 5ATM Water Resistant, Music Control










முடிந்தவரை பகிரவும்


நன்றி


No comments:

Post a Comment