விதியை மதியால் வெல்லலாம் Motivational Stories For Kids

விதியை மதியால் வெல்லலாம் Motivational Stories For Kids

positive energy story in tamil
positive energy story in tamil

ஒரு ஏரியில் மூன்று பெரிய மீன்கள் வசித்து வந்தன. மிகவும் நண்பர்களான அந்த மூன்று மீன்களும் தினமும் வித்தியாசமாக சிந்திப்பவர்கள். அவர்களில் ஒரு மீன் மிக புத்திசாலி எப்போதும் காரியங்களை சிந்தித்து நடப்பவன். இரண்டாவது மீன் சமயோசித புத்தியுடன் எப்போதும் மகிழ்ச்சியாக உள்ளவன். மூன்றாவது உள்ள மீன் விதியை மட்டும் நம்பியது. ஒரு நாள் முதல் மீன் இரண்டு மீன் பிடிப்பவர்கள் ஏரிக்கரையில் நிற்பதை கண்டது. அவர்கள் பேசுவதை மிகவும் கவனத்துடன் கேட்டது. அடுத்த நாள் அவர்கள் அந்த ஏரியில் மீன் பிடிக்கப் போவதாக தெரிந்துகொண்டது. உடனே அது விரைந்து சென்று மற்றவர்களிடம் இந்த விஷயத்தை கூறியது. இனி அங்கிருந்து போவதுதான் நல்லது என்றும் சொல்லியது. அந்த ஏரியிலிருந்து போகும் வாய்க்கால் ஒரு வழியாக போனாள். அது வேற ஒரு ஏரியில் போய் சேரும். நாம் அங்கு பாதுகாப்பாக இருக்கலாம் என்று யோசனை சொல்லியது. சமயோசித புத்தியுள்ள இரண்டாவது மீன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை நாம் இங்கிருந்து போக வேண்டாம் நம்மை பிடிக்க வருபவர்களிடம் இருந்து தப்பிக்க வேற வழி பார்க்கலாம் என்றது. மூன்றாவது மீன் வேறுவிதமாக சிந்தித்தது. எது எப்போது நடக்க வேண்டுமோ அது எல்லாம் அவ்வப்போது நடக்கும். அதை பற்றி நினைத்து நாம் கவலைப்பட வேண்டாம். எல்லாம் விதி போல் நடக்கட்டும் என்று வழக்கம்போல் பேசாமல் இருந்தது. முதல் மின் ஆபத்தை சந்திக்க விரும்பாமல் அந்த ஏரியில் உள்ள கால்வாய் வழியாக தப்பித்து சென்றது. ஆனால் மற்ற இரண்டு மீன்களும் ஏரியில் தங்கின. அடுத்த நாள் மீன் பிடிப்பவர்கள் வந்து வலையை விரித்தனர். நண்பர்களான இரண்டு மீன்களும் ஏரியில் இருந்த மற்ற மீன்களும் வலையில் சிக்கின. சமயோஜித புத்தி உள்ள இரண்டாவது மீன் வலையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பை பார்த்தது. வலையில் செத்தது போல் கடந்தது அதைக்கண்ட மீன்பிடிப்பவர்கள் அதையும் செத்த மீன்களுடன் தூக்கி எறிந்தனர். அது ஒரு வழியாக துள்ளித்துள்ளி ஏரியின் கரையை அடைந்தது. நீரில் குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டது. விதியை மற்றும் நம்பிய மூன்றாவது மீன் வலைக்குள் மேலும் கீழும் குதித்தாலும் தப்பிக்க முடியவில்லை. அது விதிப்படி அங்கு இறந்து போனது. விதியை மதியால் வெல்லலாம்.


முடிந்தவரை பகிரவும்


நன்றி

No comments:

Post a Comment