கோழையாக வாழ்கிறாய் உனக்கான ஓர் குட்டி கதை - Motivational Story in Tamil
சிங்கம், புலி, யானை போன்ற வனவிலங்குகள் குட்டிகளாக இருக்கும் போது அவற்றை சர்க்கஸ்க்கு கொண்டு வருவார்கள் ஆரம்பத்தில் அவ் விலங்குகள் எவருக்கும் கட்டுப்படாமல் தங்களது இயற்கையான குணத்தை வெளிப்படுத்தி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும். அதனால் அவற்றை பயிற்றுவிப்பவர்கள் அவை தங்களுக்கு கட்டுப்படும் வரை சாட்டைகள், கொம்புகள் போன்ற ஆயுதங்களினால் அவற்றை தாக்குவார்கள் மின்சாரம் மூலம் அதிர்ச்சி கொடுப்பார்கள் இந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் அக் குட்டிகள் தனது பயிற்றுவிப்பாளர்கள் கூறும் செயல்களை செய்ய ஆரம்பித்துவிடும். வருடங்கள் பல கடந்தாலும் அக் குட்டிகள் திடகாத்திரமான பலமிக்க சிங்கமாகவும் புலியாகவும் யானையாகவும் வளர்ந்தாலும் அதன் மனதில் குடிகொண்டிருந்த பயத்தின் விளைவாக அவை தொடர்ந்து தனது பயிற்றுவிப்பாளர்களிடம் அடிமையாகவே இருக்கின்றன.
நண்பா இதற்கு முன்னர் வாழ்வில் எத்தனை கடுமையான சோதனைகளையும் எதிர் கொண்டிருக்கலாம் எவ்வளவோ மோசமாகவும் தோற்று இருக்கலாம் உன்னை உதவாக்கரை இயலாதவன் என இவ்வுலகம் தூற்றி இருக்கலாம். அன்று நீ உண்மையிலேயே பலவீன அவன் ஆகவும் ஆளுமை அற்றவனாகவும் இருந்திருக்கலாம் ஆனால் அக்காலம் கடந்து விட்டது இன்று நீ உன் வாழ்வில் பலவித அனுபவங்களை பெற்றுள்ளாய். புதிய பல விடயங்களையும் கற்று உள்ளாய் இவ்வுலகை தெளிவாக உணரும் அளவிற்கு உன் மூளையும் முதிர்ச்சி அடைந்து விட்டது. எனில் உன் மனது மட்டும் எதற்காக தாழ்வு மனப்பான்மையில் தத்தளிக்கிறது. தன் பலத்தை மறந்து அடிமையாகி தன் எஜமானர் கூறியதை எல்லாம் செய்து கொண்டிருக்கும் ஒரு சர்க்கஸ் புலி போல நீயும் உன் பலத்தை மறந்து இவ்வுலகிற்கு பயந்து ஒதுங்கி வாழ்வது தன் காரணம் என்ன? நீ விரும்புகிறாயோ இல்லையோ உன் கற்பனைக்கும் எட்டாத ஒரு பெரும் சக்தி உன்னிடம் உள்ளது. ஆனால் அதை வெளிப்படாமல் நீயே தடுத்து கொண்டிருக்கிறாய் உன்னுள் இருக்கும் பயம், பதட்டம், கூச்சம் போன்ற குணங்கள் அதை தடுக்கின்றன உனக்குத் தாழ்வு மனப்பான்மை அதை தடுக்கின்றது.
நண்பா தேவையற்ற உன் நேரத்தை வீணாக்குவதை இக்கணமே நீ நிறுத்தவேண்டும். ஒரு முயற்சியை செய்யலாமா வேண்டாமா அதே செய்து அதில் தோல்வி அடைந்தால் என்ன செய்வது போன்ற தேவையற்ற எண்ணங்களை தூர வீசிவிட்டு உனது கனவுகளை பக்கம் உன் கவனத்தை திருப்ப வேண்டும். உனது மனதில் உள்ள திட்டங்களை செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டும் பிறர் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்னை புறக்கணித்து விடுவார்களோ அவமானப்படுத்தி விடுவார்களோ போன்ற எண்ணங்களை இன்றோடு கைவிட வேண்டும். இங்கு குறைகளை இல்லாதவர்கள் எவருமே இல்லை சிலர் அந்த குறைகளை புறக்கணித்து தங்களது திறமையில் கவனம் செலுத்தி அதைக்கொண்டு போராடி அதில் வெற்றி அடைகின்றார்கள் மேலும் சிலரோ தங்களது குறைகளை எண்ணி புலம்பியவாறே தங்களது எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். இவ்விரண்டு மனிதர்களில் நீ யாராக வாழப் போகிறாய் என்பதை இன்றே தீர்மானித்து கொள் நிச்சயம் உன் முடிவுகளின் படியே உன் எதிர்காலமும் அமையும்.
முடிந்தவரை பகிரவும்
நன்ற
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.