தனித்து நில் Motivational Story in Tamil
தான் விரும்பும் வாழ்க்கையை வாழும் உரிமையை இங்கு கடவுள் அனைவருக்கும் வழங்கியுள்ளார் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட பல திறமைகள்லோடு படைத்துள்ளார். ஆனால் இங்கிருக்கும் மனிதர்கள் அதை உணர்வதில்லை அவர்கள் கடவுள் தங்களுக்கு அளித்த வரம்களை மறந்து ஒரு ஆட்டு மந்தையைப் போல் வாழ்கின்றார்கள். தங்களின் சுயத்தை இழந்து தத்தளிக்கிறார்கள் நண்பா வாழ்வில் எத்தருணத்திலும் நீ யார் என்பதை மறந்து விடாதே உணவு தேவைகளையும் விருப்பங்களையும் மறந்துவிடாதே அவற்றை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதே வெற்றிக்காக நீ போராடிக் கொண்டிருக்கும் போது பலர் அவ்வழியில் குறுக்கிடுவார்கள். உனது பாதை தவறானது என குறை கூறுவார்கள் உனது செயலில் குற்றம் பிடிப்பார்கள். இந்த ஆட்டு மந்தை கூட்டத்தில் இருந்து விடுபட்டு நீ உனக்கான பாதையில் பயணிப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அப் பாதையின் முடிவில் உனக்காக காத்திருக்கும் மகத்துவமிக்க வெற்றியை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது. அதனால் அவர்கள் உன்னையும் அந்த ஆட்டு மந்தைக் கூட்டத்தில் இணைய சொல்வார்கள். இதற்கு முன்னே அதிகமான மக்கள் பயணித்த பாதையிலேயே உன்னையும் பயணிக்கச் சொல்வார்கள் ஆனால் நிச்சயம் அவ்வழியில் இவ்வித மகத்துவமும் உனக்கு கிட்டப் போவதில்லை உன் வாழ்க்கையில் எந்த சிறப்பும் தோன்றப் போவதில்லை பிறரிடம் முடியாது என சொல்லத் தெரியாதவன் ஆள் வாழ்வில் என்றும் வெற்றி அடைய முடியாது. நீ அடுத்தவர்களின் ஆசையை நிறைவேற்றுவதில் குறியாக இருந்தாள் அவர்களைத் திருப்திப்படுத்துவதில் குறியாக இருந்தாள். மிக விரைவிலேயே நீ உனது தனித்துவத்தை இழந்து பிறர் விருப்பத்திற்கு ஆடும் ஒரு தலையாட்டி பொம்மையாக மாறி விடுவாய். விட்டுக் கொடுப்பது என்பது போராட சக்தியற்றவர்கள் கூறும் ஒரு சாக்கு போக்காகும். அது பலவீனமானவர்களின் மந்திரமாகும். அவர்கள் அந்த வார்த்தையின் பின்னர் தனது இயலாமையை மறைக்கிறார்கள் அதுபோன்ற ஒரு கோழையாக நீ என்றும் இருந்து விடாதே வாழ்வில் உன் உரிமைகளுக்காகவும் கனவுகளுக்காகவும் நீ போராட வேண்டும். கூட்டத்தோடு கூட்டமாக கலந்து பயணிக்கும் ஒரு ஆட்டு மந்தையாக வாழாது தனது பாதையில் கம்பீரமாக பயணிக்கும் உன் சிங்கமாக நீ மாற வேண்டும். உன்னை யார் தடுத்தாலும் உன் முன்னே தடைக்கற்களை வீசினாலும் உன்னால முடியாது எனக் கூறினாலும் அவை அனைத்தையும் கடந்து நீ போராடி வெற்றியடைய வேண்டும். அன்று நீ அடையப்போகும் அந்த வெற்றி உனக்கு எதிராக இருப்பவர்களை கூட உன் பக்கம் இழுக்கும் உன்னை முட்டாள் என கூறியவர்கள் வாயினாலேயே உன் புகழைப் பாட வைக்கும்.
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.