உன் பாதையின் வெற்றியின் ரகசியத்தை உணர்த்தும் ஒரு குட்டி கதை Motivational Story in Tamil
அக் காலை வேலையில் வானைப் பிளக்கும் வாகனங்களின் இரைச்சலில் உள் தனது பஸ்இக்குகாக காத்திருந்தான் அவ்விளைஞன் சிறுது நேரங்களிலேயே பஸ்ஸும் வர வேகம் வேகமாக அதில் ஏறி தனது அலுவலகத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தான். அவன் ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞன். வாழ்வில் விரும்பியதை செய்யும் அளவிற்கு பணம் இருந்ததில்லை அவசர தேவைக்கு உதவ எந்த சொத்துக்களும் இல்லை தனது கல்வியை மட்டுமே நம்பிய வாழ்க்கை. அன்று யாரோ காட்டிய வழியில் யாருக்காகவோ ஓடிக்கொண்டிருந்தான். தன்னால் என்றும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியவில்லையே என்ற குறை அவன் மனம் எங்கும் வேரூன்றி இருந்தது. கால ஓட்டத்தில் அக்குறை ஆனது மன அழுத்தமாக உருவெடுத்தது. இந்த கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு வேறு எதுவும் செய்யலாமா என்று தினமும் அவன் சிந்திப்பது உண்டு இருந்தும் அதை தனது குடும்பம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது என்ற எண்ணமும் அப்படி புதிதாக என்ன செய்வது என்ற பயமும் அவனை அவ் வாழ்க்கையிலேயே தொடர வைத்தன. அதனால் மன அழுத்தம் அவனது உற்ற நண்பன் ஆனது. ஏமாற்றமும் விருத்தியும் அவனைச் சூழ்ந்து கொண்டன. வாழ்க்கை ஒரு சலிப்பு மிகுந்ததாக மாறியது தனது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காதா என தினமும் அவன் ஏங்குவான். அதை இணையம் முழுவதும் தேடுவான் ஆனால் இங்கும் அவனுக்கு தேவையானது கிடைக்கவில்லை.
இப்படி ஒரு நாள் தனது நண்பன் மூலம் ஒரு துறவி குறித்து அறிந்து கொண்டான் அவ் இளைஞன் அவரைப் பார்த்தாள் உனது தேடுதல்களுக்கு தீர்வு கிடைக்கும் என நண்பன் கூற. அடுத்த நாளே அந்தத் துறவியை தேடி பயணமானான். தனது வீட்டில் இருந்து பல கிலோமீட்டர் பயணித்து ஒரு கிராமத்தை வந்தடைந்தான். அங்கிருந்த ஒரு டீக்கடையில் இத்துறவிகுறித்து வினவினான். அதற்கு அவர்களும் இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஒரு மலையடிவாரம் இருக்கின்றது அங்கு சென்றாள் நீ அவரே காணலாம் எனக் கூறினார்கள். சிறிது நேரங்கள் கரடுமுரடாக பாதையில் பயணித்தவன் இறுதியில் அந்த மலையடிவாரத்தை வந்தடைந்தான். அங்கு ஒரு முதியவர் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார் அவரிடம் சென்று அந்த இளைஞன் நான் இங்கே ஒரு துறவியை தேடி வந்தேன் அப்படி யாராவது இங்கே இருக்கின்றார்களா என கேட்டான் அதற்கு அந்த முதியவர் துறவி என்று இங்கு எவரும் இல்லை ஆனால் நீ தேடி வந்தது என்னை தான் இப்போது கூறு நான் உனக்கு எவ்வாறு உதவ முடியும் எனக் கேட்டார்.
அவரை ஆச்சரியத்துடன் நோக்கிய அவ்விளைஞன் தனது மனதில் இருந்த குறைகள் அனைத்தையும் அவரிடம் கொட்டி தீர்த்து தனது தேடுதல்கள்காண பதிலை வினாவினான். அதற்கு அந்த முதியவர் அதோ அந்த ஆடுகளை பார் தினமும் காலை நான் அந்த ஆடுகளை இங்கு மேய்த்து வருவேன் மாலைவரை இம்மலை அடிவாரத்திலேயே அது அவை மேய்ந்து கொண்டிருக்கும். பின்னர் மீண்டும் நான் அவற்றை என் இருப்பிடத்திற்கு மேய்த்து சென்று அங்கிருக்கும் கூட்டினுள் அடைத்து விடுவேன். தினமும் நான் காட்டும் வழியிலேயே பயணிக்கின்றன நான் அனுமதித்த இடங்களிலேயே புல்க்களை மேய்கின்றன. மீண்டும் நான் விரும்பிய நேரத்தில் கூட்டினுள் அடைகின்றன இவற்றிற்கு என்றும் இலக்குகள் இருந்ததில்லை தங்களது கூட்டத்திலிருந்து விலகி நடக்கவும் இவை முயன்றதில்லை அதனால் தங்களது வாழ்நாள் முழுவதும் எனக்காக உழைத்துவிட்டு இறுதியில் ஏதோ ஓர் கசாப் கடையில் பலியாகின்றன.
ஆனால் இதற்கு நேர் எதிரான ஒரு மிருகமும் உண்டு அதுவே காட்டின் அரசன் அது என்னவென்பதை நீ அறிவாயா என அந்த இளைஞரிடம் கேட்டார். அதற்கு அவன் ஆம் சிங்கத்தை தானே நீங்கள் கூறுகின்றீர்கள் என்றான். அதற்கு அந்த முதியவர் ஆம் சிங்கம் தான் நான் காட்டுக்கு அரசன் என்ற நிமிடமே அது சிங்கம் ஆகத்தான் இருக்கும் என்பதை நீ உணர்ந்து கொண்டாய். ஒன்றை அறிந்து கொள் மகனே ஒரு சிங்கம் என்றும் அடுத்தவர் காட்டிய வழியில் பயணிப்பதில்லை அடுத்தவர்களின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவது மில்லை அது தனது பலன் என்னவென்பதை நன்கு அறியும் தன்னால் எது முடியும் எது முடியாது என்பதையும் நன்கு அறியும் அதனால் தனக்கு ஏற்றவாறு ஒரு உலகத்தை உருவாக்கி அங்கு வாழ ஆரம்பிக்கின்றது. அவ் உலகத்தில் அதுவே ராஜா வேறு எந்த மிருகத்தின் ஆளும் அதனுள் நுழைய முடியாது அதைப் பறித்துக் கொள்ளவும் முடியாது. அந்த அணுகுமுறையே சிங்கத்தை காட்டின் ராஜாவாக மாற்றுகின்றது அதனிலும் பலம் வாய்ந்த மிருகங்களை கூட அதன் முன்னே மண்டியிட வைக்கின்றது.
எவன் ஒருவன் தன்னை நம்புகின்றநோ தனது பலம் பலவீனத்தை உணர்கின்றநோ அவன் இவ்வுலகையே வெற்றி கொள்ளும் பலத்தை பெற்றுக் கொள்கின்றான். இன்று உன் முன்னே இரண்டு வாய்ப்புகள் உள்ளன ஒன்று மந்தையில் இருக்கும் ஒரு ஆடாக வாழ்வது இந்த வாழ்க்கையில் உனக்கு எந்த ஏற்ற இறக்கமும் இருக்காது தேவையான பணம் தேவையான பாதுகாப்பும் அனைத்தும் இருக்கும் ஆனால் நீ விரும்பியதை செய்யும் சுதந்திரம் இருக்காது உன் பின்னே என்றும் ஒருவர் இருந்து கொண்டு உன் பாதையை தீர்மானித்துக் கொண்டு இருப்பார். உன் வாழ்க்கையும் நேரமும் அவரது கையிலேயே இருக்கும் அதற்கு நீ பெரும் கூலியே பாதுகாப்பான இவ் வாழ்க்கையாகும்.
ஆனால் உனக்கு இன்னொரு தெரிவும் உண்டு அதுவே ஒரு சிங்கத்தின் தெரிவாகும் இதில் ஒவ்வொரு நாளும் சவாலானதே வாழ்வில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும் வெற்றி தோல்விகள் இருக்கும் உனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து நீ போராட வேண்டியது இருக்கும் ஆனால் இவற்றிற்கு கிடைக்கும் கூலி உனது சுதந்திரம் ஆகும். இவ் வாழ்க்கையில் உனக்கு கேள்வி கேட்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் உனக்கு கட்டளையிட யாரும் இருக்க மாட்டார்கள். இங்கு நீயே ராஜா உனது வாழ்க்கையும் நேரமும் என்றும் உனது கையிலேயே இருக்கும் ஆனால் அதற்கு கொடுக்க வேண்டிய விலை கடின உழைப்பும் போராட்ட மிக்க வாழ்க்கையும் ஆகும்.
இன்று இந்த இரண்டு தெரிவுகளிலும் எதையும் நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் ஆனால் உன் தெரிவிக்க ஏற்ப உன் வாழ்க்கையும் அமையும். மந்தையில் இருக்கும் ஒரு ஆடாக நீ வாழ முடிவு எடுத்தபின் சுதந்திரத்தை எதிர்பார்க்காதே அங்க அடுத்தவர்களுக்கு உழைப்பதே உனது வேலை. மாறாக தனது வாழ்க்கையை தானே செதுக்கிக் கொள்ளும் சிங்கமாக நீ வாழ முடிவெடுத்துவிட்டால் அங்கு சொகுசான வாழ்க்கையை எதிர் பார்க்காதே உத்தரவாதத்தை எதிர்பார்க்காதே பிறரிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பை எதிர்பார்க்காதே ஏனெனில் வாழ்க்கையை செதுக்குவதும் அதைப் பாதுகாப்பதும் முழுமையாக உன் கைகளிலேயே உள்ளது. அப்பொறுப்பை ஏற்றுக் கொள்ள நீ தயாராக இருக்க வேண்டும். இப்போதே வீடு திரும்பு இவ் இரண்டு வாழ்க்கையையும் எது உனக்கு பொறுப்பானது என்பதை ஒன்றிற்கு பலமுறை சிந்தித்து பார் அதிலிருந்து ஒரு முடிவை எடு அம்முடிவை உன் மரணம் வரை கைவிடாது போராடு ஏனெனில் ஆடாக இருந்தாலும் சிங்கமாக இருந்தாலும் வாழ்க்கை ஒரு போராட்டமே அப்போராட்டத்தில் நீ வெற்றியடைய முடியும் என்று நம்பினால் அதன் பின்னர் அதன் வெற்றியை எதனாலும் தடுத்து விட முடியாது என கூறியபடியே நகர ஆரம்பித்தார் அந்த முதியவர்.
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.