நீ அறியாத உனது பலம் Motivational Story in Tamil
ஒரு ஊரில் ஒரு முட்டாள் சிறுவன் வாழ்ந்து வந்தான் அவனுக்கு படிப்பு ஏறவில்லை விளையாட்டிலும் ஆர்வம் இல்லை பயந்த சுபாவம் கொண்டவன் அப்பாட சாலையிலேயே அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு பின்தங்கிய மாணவன் எளிதில் ஏமாந்து போகும் ஒரு கோமாளி. தனது நிலையை எண்ணி அவன் தினமும் வருந்திக் கொண்டிருந்தான். தனது மகனின் முகத்தில் இருந்த வாட்டத்தை அவதானித்த அவனது தந்தை ஒருநாள் அவனிடம் வந்து ஏன் இப்படி எதையோ பறிகொடுத்தது போல் சோகத்தில் இருக்கிறாய். உனக்கு என்ன நடந்தது என வினாவினார்?
அக்கணமே அச்சிறுவன் தனது மனமெங்கும் நிறைந்திருக்கும் வலிகள் அனைத்தையும் தன் தந்தையிடம் கொட்டி தீர்த்தான். அவனைப் பார்த்து புன்னகைத்த அவனது தந்தை வீட்டினுள்ளே நுழைந்து ஒரு அழகிய கல்லினை கொண்டுவந்தார். அக்கல்லை தனது மகனுடன் நீட்டி உன் கவலைகளுக்கு என்னுடன் தீர்வு இருக்கின்றது. ஆனால் அதற்கு முன்னதாக நமது நகரின் சந்தைக்கு சென்று அங்கு இருக்கும் மீன் தொட்டிகள் விற்பனை செய்யும் ஒரு கடையில் இக்கல்லை காட்டி இதை விற்க வேண்டும் என்று கூறு. இதன் விலையை அவர்கள் வினாவினாள் அதை நீங்களே சொல்லுங்கள் எனக் கூறு அவர்களை விலையைச் சொன்னதும் இக்கல்லை எடுத்துக்கொண்டு மீண்டும் என்னிடம் வா எனக் கூறினார்.
அச்சிறுவன்நோ அக் கல்லுடன் ஒரு மீன் தொட்டி கடைக்குள் நுழைந்து இக்கல்லை நான் விற்க விரும்புகின்றேன் என்று அந்த கடைக்காரர் உடன் கூறினான். அக்கல்லை உற்றுநோக்கிய கடைக்காரர் இதை பார்க்க மிக அழகாக உள்ளதே இதை மீன் தொட்டியினுள் வைத்தாள் அத் தொட்டி கே இது அழகு சேர்க்கும் ஆயிரம் ரூபாய் தருகின்றேன் இதை எனக்குக் கொடுத்து விடு எனக் கூறினார். அச்சிறுவன்நோ முடியாது என கூறிவிட்டு அக்கல்லை வாங்கிக்கொண்டு தன் தந்தையிடம் வந்து தந்தையே அக் கடைக்காரர் இதற்கு ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார் என்றான்.
அதைக்கேட்டு புன்னகைத்த அவனது தந்தை சரி இந்த கல்லை மீண்டும் சந்தைக்கு கொண்டு போ அங்கே வெள்ளி மோதிரம் செய்யும் ஒரு கடைக்கு சென்று இதன் பெறுமதியை கேள் அவர் பதில் கூறியதும் மீண்டும் அக் கள்ளை எடுத்துக்கொண்டு என்னிடம் வா எனக் கூறினார். சிறுவனும் மீண்டும் சந்தைக்கு சென்று ஒரு வெள்ளி மோதிரம் செய்யும் கடைக்குள் நுழைந்தான் இக்கல்லை நான் விற்க விரும்புகின்றேன். இதற்கு எவ்வளவு தருவீர்கள் என கடைக்காரரிடம் கேட்டான் கடை உரிமையாளரோ அக்கல்லை பார்த்துவிட்டு அடடா இத்தகைய அழகான கல் உனக்கு எங்கிருந்து கிடைத்தது. இதை சிறு துண்டுகளாக ஆக்கி நான் பல மோதிரங்களில் பதித்து கொள்வேன் இக்கல்லை எனக்கு கொடுத்துவிடு உனக்கு பத்தாயிரம் ரூபாய் தருகின்றேன் எனக் கூறினார். அச்சிறுவன்நோ மீண்டும் அந்த கல்லை வாங்கி கொண்டு தனது தந்தையிடம் வந்து தந்தையே மோதிர கடைக்காரர் இதற்கு பத்தாயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னார் என்றான்.
மீண்டும் புன்னகைத்த அவனது தந்தை சரி மீண்டும் இந்த கல்லை எடுத்துக் கொண்டு நான் கூறும் வைர வியாபாரியிடம் சென்று அவரிடம் இதை விற்க வேண்டும் எனக் கூறு. அவர் கூறும் விலையைக் கேட்டு வா. எக்காரணம் கொண்டும் இக்கல்லை விற்று விடாதே எனக் கூறினார். அச்சிறுவனின் தந்தை கூறும் வியாபாரியிடம் சென்று அக்கல்லை அவர் முன்னே நீட்டி இக்கல்லை நான் விற்க விரும்புகின்றேன் இதற்கு நீங்கள் எவ்வளவு பணம் தருவீர்கள் என கேட்டான். அக்கல்லை நோக்கிய அந்த வியாபாரி மலைத்துப் போனார் இந்த அறியவகை பொக்கிஷம் உனக்கு எவ்வாறு கிடைத்தது. வீட்டிற்கு சென்று பெரியவர்களை அழைத்து வா. இக் கல்லுக்கு 5 கோடிகள் தருகின்றேன் எனக்கு கூறினார். இதைக் கேட்ட சிறுவன் வாயடைத்துப் போனான். கல்லை வாங்கிக்கொண்டு தன் தந்தையிடம் ஓடிவந்து தந்தையே அந்த மாணிக்க வியாபாரி இந்தக் கல்லுக்கு 5 கோடி தருகிறேன் என்கிறார். இக்கல்லை நாம் அவருக்கே விற்று விடலாமா எனக் கேட்டான்.
அதைக் கேட்டு புன்னகைத்த அவனது தந்தை இக்கல்லை 5 கோடி என்ன 500 கோடிக்கும் நம்மால் தவிர்க்க முடியும். இது நமது குடும்ப பொக்கிஷமாகும் பல நூறு வருடமாக நாம் இதை பாதுகாத்து வருகின்றோம். இக்கல் உலகில் மிக மிக அரியவகை கல்லாகும் இதன் பெறுமதியை அத்தனை எளிதில் எவராலும் மதிப்பிட முடியாது. இது ஒரு மீன் தொட்டி கடைக்காரரின் கையில் இருக்கும் போது இதன் பெறுமதி ஆயிரம் ரூபாய் ஆகும். இது ஒரு வெள்ளி மோதிரம் கடைக்காரனிடம் செல்லும்போது இதன் பெறுமதி பத்தாயிரம் ரூபாய்கள் ஆகும். இது ஒரு மாணிக்க வியாபாரியின் கையில் செல்லும்போது இதன் பெருமதி 5 கோடிகள் ஆகும். இப்போது கூறு மகனே இக்கல் பெருமதியற்றதா அல்லது இதை வைத்திருப்பவர்கள் இதில் பெறுமதியை மலுங்கஅடிக்கின்றார்களா என தனது மகனிடம் வினாவினார்?
அதற்கு அச்சிறுவன் நிச்சயமாக இக்கல் பெறுமதியானது தான் இதை வைத்திருப்பவர்கள் தான் இதன் பெருமையை குறைகின்றார்கள் என்றான்.
அதற்கு அவனது தந்தை நீயும் இக்கல் போன்றவனே உனது பெருமதி எல்லையற்றது ஆனால் நண்பர்கள் ஆசிரியர்கள் என உன்னை சூழ்ந்து இருப்பவர்கள் அப்பெருமதியை அறிவது இல்லை அதனால் அவர்கள் உன்னை ஒதுக்கி கின்றார்கள் உதவாக்கரை என கூறுகின்றார்கள் நிச்சயம் அது அவர்களின் அறியாமையாகும் நீ உண்மையிலேயே உனது பெறுமதியை உயர்த்திக்கொள்ள விரும்பினால் வாழ்வில் எவரும் அடையாத ஒரு வெற்றியை நீ அடைந்து கொள்ள விரும்பினால் உன்னை மட்டம் தட்டும் சிறுமையாளர்கள் இடமிருந்து ஒதுங்கி உனது திறமைகளுக்கு மதிப்பளித்து அவற்றை ஊக்குவிக்கும் மனிதர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்.
ஒன்றை நினைவில் கொள் மகனே இக்கல் மீன் தொட்டியில் மூழ்கி கிடைக்கும் வரை இது ஒரு சாதாரண கல்லாகவே இருக்கும் என்று இது ஒரு மாணிக்க வியாபாரியின் கைக்குள் செல்கின்றதோ அக்கணமே இது ஒரு பொக்கிஷமாக மாறுகின்றது. ஆனால் இது தனது இடத்தை மாற்றிக் கொள்ளாமல் மீன் தொட்டியிலேயே தேங்கிக் கிடக்க முடிவெடுத்தாள் தனது வாழ்நாள் முழுவதும் இது ஒரு உதவாக்கரை ஆகவே வாழும் அதுபோலவே நீயும் உன்னை வளர்த்துக் கொள்ளாமல் நீயும் இச்சூழலிலையே தேங்கி கிடந்தாள் நீயும் உன் வாழ்நாள் முழுவதையும் ஒரு உதவாக்கரை ஆகவே வாழ்ந்து மடிவாய்.
நீ யாராக வாழவேண்டும் என்ற முடிவு உன் கையில் சிந்தித்து செயலாற்றும் என்று கூறினார் அவனது தந்தை.
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.