கழுகிடம் இருந்து கற்றுக் கொள் Motivational Story in Tamil
மழைக்காலத்தில் பறவைகள் அனைத்தும் தங்களது கூட்டினுள் அடைந்து கொள்ளும். கழுகை தவிர அக் கழுகுகள் அம்மழை மேகத்திற்கு மேலாக பறந்து சென்று தங்களது இலக்கினை அடைந்து கொள்கின்றன. இவ்வுலகில் பல்வேறு வகையான பறவைகள் இருந்தும் நாம் கழுகுகலையே வானின் அரசன் என்கிறோம். அவற்றை கம்பீரத்தின் குறியீடாக காண்கின்றோம் வெற்றியின் அடையாளமாக காண்கின்றோம். கழுகுகள் தங்களது பயணத்தின் எப்பொழுதும் தனித்தே நிற்கின்றன அவை காக்கை இடமோ அல்லது குருவி இடமோ இணைந்து பிறப்பதில்லை. ஏனெனில் இது போன்ற குறுகிய இலக்கு உள்ளவர்கள் என்றும் அதன் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருப்பார்கள். அது வானுயர்ந்து பறப்பதற்கு தடையாக இருப்பார்கள். எனவே இதுபோன்ற சிறுமையானவர்களை கழுகுகள் புறக்கணிக்கின்றன.
ஒரு கழுகு எப்பொழுதும் இன்னொரு கழுகு உடனேயே பறக்கின்றது. நீ யாரிடம் அதிக நேரத்தை செலவிடுகின்றாயோ மிக விரைவில் நீ அவர்களில் ஒருவனாகவே மாரி விடுகின்றாய் ஒரு கழுகினாள் தன்னைவிட பலமிக்க விலங்குடனும் தைரியமாக போராட முடியும். அவை எதைக் கண்டும் பயம் கொள்வதில்லை தன் இலக்கினை அடையும் வரை பின் வாங்குவதில்லை இந்த அணுகுமுறையே கழுகை விட பலமிக்க உயிரினங்களுக்கு கூட கழுகின் மீது மிகப்பெரிய பயம் தோன்ற காரணமாக உள்ளது.
வேகமான காற்றைக் கண்டு பிற பறவைகள் ஒளிந்திருக்க இக் கழுகுகள் மட்டும் அக் காற்றின் உதவியோடு வானுயர்ந்து தன் சிறகுகளை அசைக்காமல்லையே அக்காற்றில் மிதந்தபடி தன் இலக்கை அடைகின்றன. தன் முன்னே இருக்கும் தடையை கண்டு பிற பறவைகள் ஒதுங்கி கொண்டிருக்கையில் இக்கழுகுகள் மட்டும் அத்தடையை கொண்டே தன் பயணத்தின் மேலும் இலகுவாக்கிக் கொள்கின்றன. எப்போதும் இங்கு பிரச்சனைகள் ஒன்றாகவே இருக்கும். ஆனால் அப் பிரச்சனைகளை ஒருவன் எவ்வாறு அணுகுகின்றான் என்பதை பொருத்தே அவன் வாழ்வில் வெற்றி அடைகின்றனா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகின்றது.
நண்பா வாழ்வில் உன் முன்னே தடைகள் தோன்றும் போதும் உன் வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறும் போதும் இக் கழுகுகினை எண்ணிக்கொள், இதன் மனப்பான்மையே எண்ணிக்கொள் இக்கழுகுகள் எவ்வாறு தன் முன்னே இருக்கும் தடைகளை தன் பலமாக மாற்றிக் கொள்கின்றதோ தன் சக்திக்கு மீறிய போராட்டமாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்கின்றதோ அதுபோல எவரும் அசைக்க முடியாத ஒரு அசுரனாக நீ மாறு உன்முன்னே இருக்கும் தடைகளை கொண்டே முன்னேற கற்றுக்கொள் உன் மன வேதனைகளை ஏரி பொருளாக்கி அதைக்கொண்டே உன் பயணத்தை வேகமாக ஆக்கு நிச்சயம் நீயும் ஒரு அரசனாக மாறி கம்பீரமாக தலை நிமிர்ந்து வாழ்வாய்.
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.