எறும்பிடம் இருந்து கற்றுக்கொள் Ant Motivational Story in Tamil

எறும்பிடம் இருந்து கற்றுக்கொள் Ant Motivational Story in Tamil

Ant Motivational Story in Tamil

காட்டில் குளிர்காலம் தோன்றும்போது விலங்குகள் அனைத்தும் தங்களது கூட்டின் உள்ளேயே அடைந்து கிடக்கும். பெரும் உணவு பஞ்சம் தோன்றும் பல விலங்குகள் இறந்தும் போகும் எறும்புகளை தவிர அவை குளிர்காலம் தோன்றுவதற்கு முன்பாகவே அதை உணர்ந்து கொண்டு கோடை காலத்தில் தங்களுக்கு கிடைக்கும் அனைத்து உணவுகளையும் சேமிக்கின்றன குளிர்காலம் தோன்றி உணவு பஞ்சம் உருவாகும்போது தாங்கள் சேமித்த உணவுகளை உண்டு நிம்மதியாக வாழ்கின்றன.

எருமைகளுக்கு வேலை செய்ய யாரும் கற்றுக் கொடுப்பதில்லை அவைகளை வழிபநடத்துவதும் இல்லை ஊக்குவிப்பதும் இல்லை அவை இயற்கையிலேயே உழைப்பின் மகிமையை உணர்ந்துள்ளன. எதை செய்தால் நமது எதிர்காலம் சிறப்பாக அமையுமோ அதை தயங்காமல் செய்கின்றன அதைத் தவிர வேறு எதையும் அவை கண்டுகொள்வதில்லை எறும்புகள் என்றும் எதற்காகவும் தங்களது பயணத்தை நிறுத்துவதில்லை முயற்சியைக் கைவிடுவதில்லை அவற்றின் பயண பாதையில் ஒரு தடை உருவாகும்போது அக்கணமே அதற்கான மாற்று வழியை கண்டறிந்து அத்தடையை தகர்த்து எரிகின்றன.

Ant Motivational Story in Tamil

தங்களால் சுமக்கவே முடியாத ஒரு பொருளாக இருந்தாலும் அப்பொருள் பெறுமதியானது எனக் அவை கருதினால் அதை தங்களது கூட்டின் உள் கொண்டு செல்லாமல் அவை ஓய்வதில்லை அம்முயற்சியில் எவ்வளவு கஷ்டம் தோன்றினாலும் அவை பொறுமையோடு அதில் வெற்றி பெறுகின்றன தன்னை விட 50 மடங்கு நிறை உள்ள பொருளையும் தாங்காமல் சுமக்கின்றன. நண்பா வாழ்வில் எவருமே அடையாத வெற்றியை நீ அடைய வேண்டும் என்று விரும்பினால் இந்த எரும்பை போல வாழ கற்றுக்கொள். அவை எப்போதும் தங்களது எதிர்காலம் குறித்தே சிந்திக்கின்றன எதிர்காலத்தை ஒளிமயமான தாக்க இன்று தன்னால் என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்கின்றன.

அவை தங்களது முயற்சிகளை சிறியது பெரியது என பிரித்து பார்ப்பதில்லை இலகுவானது கஷ்டமானது என பிரித்து பார்ப்பதில்லை இதை செய்தால்தான் வெற்றி கிடைக்கும் என்ற தருணத்தில் அவை எந்த வேலையையும் செய்கின்றன தங்களது சக்திக்கு மீறி கஷ்டப்படுகின்றன. பின்னர் அந்த கஷ்டத்திற்காக பலனை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கின்றன.

Ant Motivational Story in Tamil

நண்பா இக்கணமே ஓர் எரும்பை போல தன்னிகரற்ற உழைப்பாளியாக நீ மாற வேண்டும். அவை உணர்வது போல உனது எதிர்காலத்தை நீ உணர வேண்டும் உன் பயணத்தில் தடைகள் தோன்றும் போது ஒரு எரும்பு போல விரைவான மாற்று வழியை கண்டறிய வேண்டும். உன் முன்னே எத்தனை தடைகள் தோன்றினாலும் ஒரு அடிகூட பின்வாங்காமல் முன்னேற கற்றுக்கொள்ள வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதில் உனது முழுமையான உழைப்பைக் கொடுத்து போராட வேண்டும். இப்படியான கடின உழைப்பாளியாக நீ வாழ்வாயாக இருந்தால் வாழ்வில் எவருமே எதிர்பாராத ஒரு வெற்றியை நீ அடைந்து கொள்வாய். பிற மனிதர்கள் தங்களது வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கையில் நீ மட்டும் நிம்மதியாக உனது நாட்களை கடத்திக் கொண்டு இருப்பாய் எனவே உன் முன்னே இருக்கும் அந்த எரும்பைப் பார் அது ஒரு வெற்றியாளன் இன் உண்மையான தகுதிகளை கூறும்.


முடிந்தவரை பகிரவும்



நன்றி

No comments:

Post a Comment