How to Make Kothu Chapathi recipe in Tamil

How to Make Kothu Chapathi recipe in Tamil

How to Make Kothu Chapathi recipe in Tamil


Kothu Chapathi செய்வதற்கு தேவையான பொருள்கள் :

1. 4 சப்பாத்தி
2. எண்ணெய்
3. கடுகு
4. 1 துண்டு பட்டை
5. 2 கிராம்பு
6. 2 ஏலக்காய்
7. 2 பச்சை மிளகாய்
8. கறிவேப்பிலை
9. இஞ்சி பூண்டு விழுது
10. 2 பெரிய வெங்காயம்
11. 2 தக்காளி
12. மஞ்சள் தூள்
13. மிளகாய்த்தூள்
14. கரம் மசாலா
15. சீரகத்தூள்
16. உப்பு
17. தண்ணீர்
18. 3 முட்டை
19. மல்லி இலை

How to Make Kothu Chapathi recipe in Tamil



செய்முறை :

Kothu Chapathi செய்வதற்கு முதலில் 4 சப்பாத்தியையும் சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்

வெட்டி வைத்த பிறகு ஒரு பேனில் 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து 1/4 கடுகு, 1 துண்டு பட்டை 2 கிராம்பு, 2 ஏலக்காய், 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை, 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
வதக்கிய பிறகு 2 சின்ன சின்னதா நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயத்தை வதக்கி பிறகு 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள் கடைசியா தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் 2 நிமிடம் வரை வதக்கவும்.

வதங்கிய பிறகு 2 சின்ன சின்னதாக வெட்டிய தக்காளியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 

வெந்த பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து 3 முட்டை தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து முட்டையை வேக வைக்கவும்.

முட்டை வெந்தபிறகு நாம் வெட்டி வைத்திருந்த சப்பாத்தியை சேர்க்கவும் கடைசியாக மல்லி இலையை சேர்த்து நன்கு mixed செய்து ஒரு நிமிடம் வரை வேக வைக்கவும்.

இதோ நம்மளுடைய சுவையான Kothu Chapathi recipe தயார்.


நன்றி



No comments:

Post a Comment