கருப்பான நடிகையை ஒதுக்குகின்றார்கள் - பேட்ட பட நடிகர் ஆதங்கம் - Tamil Cenima News

Tamil Cenima News
Tamil Cenima News


இந்தி பட உலகில் யாரும் நட்புறவுடன் பழகுவதே இல்லை, இங்கு இனவெறிகள் தான் அதிகமாக உள்ளது என்று பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நவாசுதீன். இந்தி பட திரைஉலகில் முன்னணி வில்லனாகவும் மற்றும் குணசித்திர நடிகராகவும் சிறந்த நடிகருக்கான விருதுகளை பெற்றுள்ளார் நவாசுதீன் சித்திக். எனவே இந்த நிலையில் திரைப்பட துறையில் இனவெறி இருப்பதாகவும் நவாசுதீன் சித்திக் குற்றம்சாட்டி உள்ளார். 

இதுகுறித்து நவாசுதீன் சித்திக் அளித்துள்ள பேட்டியில், ‘‘இந்தி திரை பட உலகில் நட்புடன் பழகுவது இல்லை. இங்கு இனவெறி தான் அதிகமாக உள்ளது. ஒரு நடிகை கருப்பாக இருந்தால் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்காமல் ஒதுக்கி விடுகிறார்கள். படம் நன்றாக வர திறமை உள்ளவர்களே நடிக்க வைக்கவேண்டும். ஆனால் இங்கு அந்த நிலைமை இல்லை தோலின் நிறத்தை பார்க்கின்றார்கள். நான் உயரம் குறைவாக இருந்ததனால் என்னை பல வருடங்களாக நிராகரித்து விட்டார்கள். ஆனால் நடிப்பு மற்றும் திறமையால் இப்போது எனக்கு புகல் மற்றும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

Tamil Cenima News
Tamil Cenima News

இந்தி திரைப்பட உலகில் நிலவும் இந்த இனவெறிகளை நான் எதிர்த்து பல வருடமாக போராடி வருகிறேன். பல பெரியநடிகர்களும் இனவெறினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்றார். இந்த குற்றச்சாட்டு திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment