How to Make Nandu Kulambu | Nandu Kulambu in Tamil

How to Make Nandu Kulambu | Nandu Kulambu in Tamil

How to Make Nandu Kulambu | Nandu Kulambu in Tamil

Nandu Kulambu ( Crab Masala ) செய்வதற்கு தேவையான பொருட்கள் :

1. 1/2 கிலோ நண்டு
2. எண்ணெய்
3. 2 டேபிள் ஸ்பூன் சீரகம்
4. 2 டேபிள்ஸ்பூன் சோம்பு
5. 1 டேபிள் ஸ்பூன் மிளகு
6. 2 பச்சை மிளகாய்
7. 1 பெரிய வெங்காயம்
8. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
9. 2 தக்காளி
10. 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
11. 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
12. 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
13. 1/2 Cup துருவிய தேங்காய்
14. 3 ஏலக்காய்
15. 2 கிராம்பு
16. 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு
17. உப்பு
18. கருவேப்பிலை

How to Make Nandu Kulambu | Nandu Kulambu in Tamil


செய்முறை :

நண்டு குழம்பு செய்வதற்கு ஒரு Pan னில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் , 2 டேபிள் ஸ்பூன் சோம்பு, 1 டேபிள் ஸ்பூன் மிளகு சேர்த்து ஒரு நிமிடம் மிதமான சூட்டில் வறுத்துக்கொள்ளவும்.

வறுத்த பிறகு அதில் சின்ன சின்னதாக வெட்டிய பெரிய வெங்காயத்தை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வெங்காயத்தை வதக்கவும். வெங்காயத்தை வதக்கி பிறகு அதில் 2 பச்சை மிளகாய், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வேகவைக்கவும்.

பச்சை வாசனை போனவுடன் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு Mixed செய்து கொள்ளவும்.

Mixed செய்த பிறகு அதில் இரண்டு தக்காளி சேர்த்து 1/4 Cup தண்ணீர் சேர்த்து கொஞ்ச நேரம் வேக வைக்கவும்.

வெந்த பிறகு அதை கொஞ்ச நேரம் ஆறவைக்கவும். ஆறிய பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து அதை Paste அரைக்கவும்.

அரைத்த பின்பு ஒரு Pan னில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் 3 ஏலக்காய், 2 கிராம்பு, 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்த பிறகு அதில் நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருந்த அந்த Paste சேர்க்கவும். 

Masala Paste சேர்த்த பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்த பின்பு நண்டை சேர்த்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அதை Mixed செய்யவும்.

Mixed செய்து விட்டு 15 நிமிடம் மிதமான சூட்டில் நண்டை வேக வைக்கவும். கடைசியாக கறிவேப்பிலை சேர்க்கவும்.

இதோ நம்மளுடைய சுவையான நண்டு மசாலா தயார்.


நன்றி


No comments:

Post a Comment